இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50122முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
நோர்வே நாட்டு கூண்டு மீன்பிடி குறித்து மீனவர்களுக்கு பயிற்சி ராமேஸ்வரம் : நோர்வேநாட்டு நவீன கூண்டு மீன்பிடிப்பு முறை குறித்து, ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடல் வளம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கரைவலை, ஓலைவலை உள்ளிட்ட முறைகளில் மீனவர்கள், பல தலைமுறைகளாக மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகுகளுக்கு மத்தியில், பழமையான முறைகளை கைவிட்டு விடாத இவர்களுக்கு, மிகவும் குறைந்த வருவாய் தான் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியில் நோர்வே நாட்டில் பயன்படுத்தப்படும் நவீன கூண்டு வைத்து மீன்பிடிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மீன்பிடிப்பு தொழில்நுட்ப பயிற்சி மையம் மற்றும் டாடா நிறுவனம் இணைந்து, இவ்வகை மீன்பிடி கூண்டுகளை நார்வே நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. நோர்வே தொழில்நுட்ப வல்லுனர்கள் கின்சே, ஹால்வார்டு எல் ஆஸ்ஜோர்டு, டாடா நிறுவன தொழில் நுட்ப ஆலோசகர் டாக்டர் சக்திவேல் மீனவர்களுக்கு பயிற்சியை வழங்கி, கூண்டுகளையும் வழங்கினர்.
நோர்வே தொழில்நுட்ப வல்லுனர் கின்சே கூறுகையில்,"" நோர்வே நாட்டில் இவ்வகை கூண்டு மீன்பிடிப்பில், அதிகமான மீனவர்கள் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருகின்றனர்,'' என்றார்.
டாடா தொழில் நுட்ப ஆலோசகர் சக்திவேல் கூறுகையில்,""சென்னை ராயபுரம், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஓலைக்குடாவை தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மீனவர்கள் தற்போது பயன்படுத்தும் கூண்டையும், வலையையும் ஆண்டு தோறும் புதுப்பிக்கவேண்டும். மீனவர்களின் ஆர்வத்தை பொறுத்து அதிகளவில் கூண்டுகள் தயாரிக்கப்பட்டு, அரசின் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.
நன்றி - தினமலர் |

