இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50109முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
பகிர்வு 7 - கவிதா
பரந்து விரிந்த பூமி, நில்லாது ஓடும் நதி, காற்றாடும் மேகம், சுடும் நெருப்பு, உணர்வைத் தொடும் காற்று என்று ஐம்பூதங்களையும் மட்டுமல்ல நேற்றைய இன்றைய பொழுதின் குருதி தோய்ந்த சமூகம், முகவரி தொலைத்த மனிதர், முகம் இல்லாத மனிதம் என்று அத்தனையும் தம் குரலில் பதிவுசெய்யும் மொழிக் காதலர்கள் கவிஞர்கள்.
படிமங்களாலும், உவமானங்களாலும் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த கவிதையின் பாதை, அதே வழியில் தன்னை இழுக்கும் செக்குமாடு போலல்லாது கயிறறுத்து இன்று பல தளங்களிலும் தன்னை பரீட்சித்துக் கொண்டிருக்கிறது. தளத்திலும் புலத்திலும் தன் விரல்கள் வரித்துச் செல்லும் கவிஞர் சேரனுடைய கவிதைகள் கவித்துவம் பற்றிய பேச்சாக மட்டும் நில்லாது ஒட்டுமொத்த அனுபவங்களை அள்ளி வருகிறது. கவிஞர் சேரனுடைய கவிதைத் தொகுதிகள் அனைத்தும் என் கைகளுக்கெட்டவில்லை. படித்து நான் ரசித்த சில வரிகளை நாம் பகிர்ந்து கொள்வோமே.
”தொடரும் இருப்பு” என்ற கவிதைத் தொடரின் இறுதிவரி இப்படிச் சொல்கிறது. அலைக் கரங்கள் மணலுக்கு
கவிஞர் சேரனின் ”இரண்டாவது சூரிய உதயம்” என்ற கவிதையில் இருந்து இந்த வரிகள் என்பதாம் ஆண்டுகளில் கவிஞரை அடையாளப்படுத்திய கவிதைளில் ஒன்று சிரஞ்சீவிதம் கொண்;டு எம் முன்னுடன் இன்றும் காற்றோடு வருகிறது. ..... கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
முன்பெல்லாம் கவிதை என்றால் ஓசைநயத்தில் சொற்கள் மிளிரவேண்டும். இன்றெல்லாம் ஓசை நயம் பற்றிய சிந்தணையே கவிஞர்களுக்கு இருப்பதில்லை. இன்றைய உணர்வுகளின் சிந்தனை வீச்சை இலக்கண மரபிற்குள்ளே அடைத்து வைக்க புதுக்கவிஞர்கள் தயாராகவும் இல்லை. முன்பு போல சத்தம்போட்டு வாசிக்கப்படும் கவிதைகள் எல்லாம் இன்று மனதிற்குள்ளே மீட்டப்படுகின்றன. அவை கிளப்பிவிடும் உணர்வலைகள் எங்கோ ஒரு மூலையில் சிறு அதிர்வையாவது ஏற்படுத்திவிடும் வல்லமை கொண்டு, கவிதைகள் கவிஞர்களிடம் இருந்து புறப்பட்டுச் செல்கிறது.
மிகப்பரந்த அளவில் மானுடத்தின் நேசம் பாய்ந்த கணப்பொழுதுகளை எத்தனை ஆசுவாசமாகவும் நிதானமாகவும் காட்சிப்படுத்துகிறார் என்பதiயும் சோமான ஒரு காதல் சுகத்தையும் இந்த வரிகளின் மூலம் கவிஞர் எம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்
பிரிதல் கோடி எங்கும் மல்லிகைப்பூ இப்படித்தான் விரியும் மஞ்சு,
சொற்களின் இறுக்கம் தளர்த்தி, வாசகனிடம் மாயாஜால வித்தைகளைக் காட்டாமல் எளிமை கொண்டு வரும் கவிதைகள் வெற்றி பெறுகின்றன. கவிதைகள் ஏன் புரியவேண்டும் என்று வாதிடுபவர்களும் உண்டு. புரியப் போவதில்லை என்று தெரிந்து கொண்டே ஏன் எழுத வேண்டும். யாருக்கு எழுதவேண்டும். சாதாரணமாய் தொடர்ந்து கவிதை வாசித்தலை வழக்கமாக்கிக் கொண்ட ஒருவன் பல முறை படித்தும் புரியாத புதிராகத் தோன்றும் கவிதை வாசகனைச் சலிப்படையச் செய்கிறது என்பதே உண்மை. மொழி வளம் வாசகனது மனதை ஊடுருவிச் செல்வதாகவும், நுழைந்தபின் புதிய சிந்தனைகளைத் தூண்டிவிடும் வலிமைமிக்கதாகவும் இருக்க வேண்டும். சாதாரண உணர்வுகளை சிக்கலான நடையில் எழுதி அதைப் படிக்கிறவர்கள் குழப்பமடைவதுதான் உயர்ந்த இலக்கியம் என்னும் சில அறிவுஜீவிகளின் சிந்தனையின்றி, எளிமைத்தமிழே சேரனின் கவிதைகளுக்கு இலக்கிய பலம் சேர்த்திருக்கிறது.
முதல் வாசிப்பிலேயே தன்வசம் ஈர்த்துவிடக் கூடிய சேரனின் கவிதையொன்று ஈழத்தழிழரின் போர் வரலாற்றை சில வரிகளினூடு யாதார்த்தமாயும் எளிமைiயாயும் எம்முடன் பேசிப்போகிறது.
கடவுளரும் பிசாசுகளும் அந்தப் புள்ளியிரிருந்து இன்னொன்று மேற்கே போயிற்று திரும்பி வரும் கனவுகள் மூன்று தெருக்களிலிருந்தும்
கவிஞருடைய கவிதையில் சொற்களின் தூவல்கள் இன்றி ஒரு சாதாரண மனித வாழ்க்கையை, கதையை நம்மோடு விட்டுச் செல்வது தெரிகிறது. ஒரு கவிதையின் முடிவில் எம் சார்ந்த உலகையும் சோகத்தின் சுவடுகளையும் விட்டுபோகிறது. காற்றின் திசைக்கேற்ப்ப தாறுமாறாய் கார்மேகம் மோதி கொட்டும் துளிகள் போல உணர்ச்சித் திரளின் உந்துதலில் கொட்டிப்போன கவிதைகளாய் இல்லாது கற்பனையாகவிருந்தாலும் சம்பவங்களின் நேர்த்தியான கோர்வையாய் மடியில் வந்து விழுகின்றன இந்தத் துளிகள்.
எல்லாவற்றையும் மறந்து விடலாம்
கற்களை அடுக்கி வீடு கட்டுவதுபோல பல மாடிகள் கட்டுவதல்ல கவிதை. மாறாக தேவைக்கேற்ப கற்களை விலக்கி செதுக்கி சிற்பமாகுவதே என்று சொன்னால் பொருத்தம் எனலாம். வாசகனை தொடர்ந்து வாசிக்க தூண்டும் படி அமையுமானால் அது சிறந்த இலக்கியம் எனப்படுகிறது. அந்த வகையில் சேரனின் இந்த கவிதைச் சொற்களின் நேர்த்தியை பாருங்கள்.
எப்படிப் புணர்வது என்பதைப்
மொழியின் தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
சேரனின் கவிதைகளில் காணப்படும் சொல்அமைப்பு முறை பல கவிஞர்களிடம் இருந்து அவருடைய தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது. பொது நிகழ்வுகளை கவிதையின் வடிவம் சிதறாமல் உரையாடல் தொனி கலந்து நம்மிடம் தருவது கவிஞருடைய சிறப்பு
சேரனின் பல நூறு கவிதைகளில் சிலவற்றையே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். கவிதை பிரியம் உள்ளவர்களும் மேலும் சேரனின் கவிதைகளை படிக்க ஆர்வமுள்ளவர்குளும் கவிஞருடைய ”இரண்டாவது சூரிய உதயம்” ”யமன்” ”கானல் வரி” ”எழும்புக்கூடுகளின் ஊர்வலம்” எரிந்து கொண்டிருக்கும் நேரம்” ”நீ இப்பொழுது இறங்கும் ஆறு” ”உயிர் கொல்லும் வார்த்தைகள்” எனும் கவிதை நூல்களில் காணலாம்.
|


