இன்றைய ஒளியோவியம்

Green Sea Turtle.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50112
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

இரண்டாவது பழம்

பெண் புரட்சி...
ஏதேன் தோட்டத்து வேலி
தகர்த்துக் கிளம்பிய
முதல் பெண்ணிலிருந்தே
தொடங்கலாம்...

 

ஆண்கள் வேட்டையாடினர்
பெண்கள் சமைத்தனர்
என்ற
இலகு வரலாற்றை
எழுதித்தர இன்று
யாரும் தயாரில்லை

 

”நேசிப்பது
போராடுவது
பணி செய்வது”
எனும் பெண் வரலாறு
சிதையும் உளியை
கையிலெடுத்தது
சிதைக்கவும் சிற்பமாக்கவும்
மட்டுமன்று
இருட்டைக் கிழித்து
முழுதாய் எம் சூரியனை
அதிற் செருகவும்தான்

 

உளியின் முனை
தட்டும் இடமெல்லாம்
உயிர் பெறும்
மிச்சம் மீதி துகள்களாகும்

 

சமூகத்தின் சிதைவுகளை
எதிர்க்கத் துணித்ததனால்
ஒரு பெண் அடங்காப்பிடாரி என்றால்
அப்படியே இருக்கட்டும்

 

நீயூட்டனின்
மூன்றாம் விதி
எடுத்துரைத்த எதிர்வினையாய்
நாங்கள்

ஏதேன் தோட்டத்தின்
இரண்டாவது பழம்
இப்போது எம் கையில்

 


.- கவிதா நோர்வே

 

 

தற்போதய வாசகர்கள்

We have 2 guests online