பதிவுகள்
விளம்பரம்
எதிர்வரும் நிகழ்வுகள்
| 26.11.11 தமிழர் நாள் நேரம் 09:00 - 21:00
11.12.11 இலக்கியப் பூங்கா
|
முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
| ”குருதிவலி” |
|
- கவிதா நோர்வேயின் இரண்டாம் தலைமுறையின் மூத்த கவிஞர் திரு வசீகரனின் இறுவட்டு ”குருதிவலி” வெளியீடு ஞாயிற்றுக்கிழமை 15ஆம் நாள் கார்திகை மாதம் Grorud Samfunnshus மண்டபத்தில் வெளியிடப்பட்டது. ”காதல் கடிதம்” "காதல் மொழி" ” காதல் வானம்” என்ற இறுவட்டுக்களை ஏற்கனவே வழங்கிய கவிஞரின் நான்காவது இறுவட்டு ”குருதிவலி”. வசீகரனின் வரிகளுக்கு இசைவடிவம் கொடுத்தவர் வி.எஸ். உதயா. கவிஞரின் மற்றும் எம் தேசத்தின்
கவிஞர் சிவாதாஸ் அவர்கள் இறுவட்டுக்கான விமர்சனத்தை செய்தார். இளம் கலைஞர்களால் கவிதைகள் உண்ர்வு பொங்க வாசிக்கப்பட்டது. ஒரு பாடலுக்கு எம் தேசத்தின் அவலங்களை தொகுத்துத் திரையில் காட்சியாகவும் காட்டப்பட்டது. நித்யசஸ்ரீயின் குரலில் பாடப்பட்ட ”தாய் மண்ணை முத்தமிட வேண்டும்” என்ற பாடலுக்கு மிக தெளிவாக எமது அவலங்களை நடனவடிவமாக்கித் தந்தவர் நடனமணி தமிழினி சிவலிங்கம். ”எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது” என்ற பாடலுடன் பாடல்கள் ஆரம்பிக்கிறது. வி.எஸ் உதாயாவின் குரலில்
சமீபகாலமாக எம்மக்களிடையே பிரபலமான வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி தனது கருத்தையும் ஒரு பாடலாகவும் பதிவு செய்திருக்கிறார்.
கவிஞர். சிவதாஸ் குறிப்பிட்டது போல போர்தான் முடிந்திருக்கிறது. போராட்டம் முடியவில்லை என்ற நம்பிக்கையை மேலும் வரிகளில் எம் மக்களுக்கு அளித்திருக்கலாம்.
சில குறிப்புகள் (குருதி வலி வெளியீடு தொடர்பானதல்ல.) : புலம் பெயர்ந்து எம் மத்தியில் வாழும் கவிஞர்களில் அதிகமானவர்கள் தமது வரிகளுக்கான இசையை செலவுகள் அதிமானலும் தமிழ்நாட்டில் வாழும் இசையமைப்பாளர்களைக் கொண்டே இசையமைத்து இறுவட்டு வெளியிடுவது இங்கு அதிகமான நிலையில், இசையமைப்பாளர்களும், படைப்பாளிகளம் தேவை கருதி கவிஞர்களைத் தேடி தமிழகம் (வைரமுத்து, முத்துக்குமார், யகபாரதி, தாமரை போன்றோரிடம்) போய்விட்டால்... எமது கலைஞர்கள் ஒன்றுபட்டு இணைந்து படைப்புகளைத் தருவது அரிதாகி விடுகிறது. எமது கலைஞர்கள் மத்தியிலும் ஒத்துழைப்பும் குன்றிவிடுகிறது. இதற்குரிய காரணங்களை நாம் தேடி எம்மையும் எம் கலையுலகத்தை வளர்த்தெடுப்பது என்பது நாளைய எமது வளரச்சிக்கு இன்றியமையாத ஒன்று. நடந்தேறிய இசைத்தொகுப்பு வெளியீடுகளில் இசையாவலர்களையம், இசையமைப்பாளர்களையும் காணமுடிவதில்லை என்பது எமது வளர்ச்சிக்குரிய வழி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கவிதை இசைத்துறையில் மட்டுமல்ல நடன துறையிலும் இத்தகைய போக்கை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. எம் சமூகத்திடையே இணைந்து செயல்படுதல் என்பதும் அரிதாகிப் போய்க்கொண்டிருக்கிற நிலை கவலைக்குரியதும், கவனத்திற்குரியதுமாகும். இது பற்றிய குறிப்பகளும் செய்திகளும் விரைவில் நூர்தமிழில்...
|


வலிகளைச்சுமந்த வரிகளைக் கோர்த்து எம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் வசீகரன் இரண்டு கவிதைத் தொகுதிகளுக்கும் சொந்தக்காரர்.
வந்தவனும் போட்டவனும் நல்லாதானே இருக்கான்
“அழகான ஊரெல்லோ” என்ற பாடலில் தனது முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார். வசீகரனின் பலராலும் விரும்பபட்ட “யாழ்தேவியில் காதல் செய்தால்” பாடலில் தொடங்கி இந்த பாடல் வரை பாடலின் இடையில் உரைநடையை யதார்த்தமாக வழங்கும் பாணி கையாளப்பட்டிருக்கிறது.