இன்றைய ஒளியோவியம்

Creek.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

10-10.10 பரதநர்த்தனம்
பரதநர்த்தனாலயா
மாலை : 17:00
இடம்:  Lillestrøm kulturhus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50763
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

User Rating: / 1
PoorBest 

ஆண்கள் பெண்கள் பற்றி சிரிக்க மட்டும்

பெண்களை கிண்டல் செய்யும்  ஜோக்குகள்  

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸ்-க்கு ஒரு இந்தியப் பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்...

 

 

  

 

ஏன் போறீங்க?

 

எப்படி போறீங்க?

 

என்ன கண்டுபிடிக்க போறீங்க?

 

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

 

நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?

 

நானும் உங்ககூட வரட்டுமா?

 

எப்ப திரும்ப வருவீங்க?

 

எங்கே சாப்பிடுவீங்க?

 

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

 

இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

 

இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?

 

பதில் சொல்லுங்க ஏன்?

 

நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

 

நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?

 

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

 

ஏன் பேசமா இருக்கீங்க?

 

என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?

 

இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

 

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

 


இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா??? 

 

இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??

 

 

 

ஆண்களை கிண்டல் செய்யும்  ஜோக்குகள்

 

கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ' ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? '
கடவுள் சொன்னார் ' நீ பெண்ணை காதலிக்கத்தான் '
ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை முட்டாளாகப் படைத்துவிட்டார்கள் ? '
கடவுள் சொன்னார் 'அவள் உன்னை காதலிக்கத்தான் '


ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ?
ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான்

 


ஒரு ஆணை ளவை-ரி கள் செய்யவைப்பது எப்படி ?
டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான்

 


ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ?
கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான்.

 

 
 

பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்

 

வேற்றுமைகள்
ஒரு ஆணை நிராகரிக்க பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்)


10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய்இ அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் அருண் ஐஸ்கிரீமுமே மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயேஇ அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன்இ ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)

4) நீ காரணமில்லைஇ நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்)
எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்
(நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்)

..................


பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை

 

10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

4) நீ காரணமில்லைஇ நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)
எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்
(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )

 

.................................
 

 

 

 

 

 

தற்போதய வாசகர்கள்

We have 5 guests online