இன்றைய ஒளியோவியம்

3d-art-0024.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

10-10.10 பரதநர்த்தனம்
பரதநர்த்தனாலயா
மாலை : 17:00
இடம்:  Lillestrøm kulturhus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50769
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

 

காதலித்த பூமியெல்லாம்
கண்ணிறைந்த கனவிலடா
கண் வளர்வாய் கண்மணியே
காலம் நம்மைச் சேருமென்று

 

பூப்பறித்து மாலை கட்ட
பூமியிலே நாதியில்லை
பூமியெல்லாம் காடுறையும்
பூழுதி மண்டி போனதடா

 

மழை தூவும் வானமெல்லாம்
மண் விழுந்து போனதடா
விளையாத நிலங்களெல்லாம்
புழுதி வயல் ஆனதடா

 

கூவுகின்ற குயில்களெல்லாம்
குரலிழந்து போனதடா
கூண்டுக்குள்ளே சூரியனும்
துயிலாகிப் போனதடா

 

இருளான வானத்திலே
நிலவை எங்கே காட்டுவது?
இல்லாத கிண்ணத்திலே
சோறெங்கே ஊட்டுவது?

 

போர்ப்பாட்டை முணுமுணுத்து
போனவன்தான் மாலையொன்றில்
போன தந்தை வரவுமில்லை
போன பக்கம் குரலுமில்லை

 

தானாக விடியாத
கீழ்வானம் நமது கண்ணே
தங்கமே இன்று மட்டும்
தாலாட்டில் நீ உறங்கு

 

காணுகின்ற கனவுகளும்
காரிளூய் தோன்றுதடா
காலை வரும் முன்னாலே
வெள்ளிகளும் தொலையுதடா

 

கழுகுகளும் ஓநாயும்
கங்கணமாய் சிரித்தபடி
கோடியினனைச் சூழ்ந்திருக்கும்
கொடுமையினைப்
பாடுவேனோ...

 

 

 

 

தற்போதய வாசகர்கள்

We have 1 guest online