இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50137முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
நர்த்தன காவியா நிகழ்வு -ந.பத்மநாதன் கல்யாணி மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு சதம் அடித்து விட்டார் பாராட்டுக்கள். புஷ்பாஞ்சலியின் சிறப்பில் அனவரையும் உள்ளே இழுது கிட்டத்தட்ட 90 நினிடங்கள் எல்லோரயும் கட்டிப்போட்டுவிட்டர் . ஏற்கனவே திரு.Steephan அவர்க்ள் பாராட்டிவிட்டார்கள் . அவருடன் நான் ஒத்துப்ப்போகின்றேன் . இம்முறை நர்தகிகளினது அழகிய தன்நம்பிக்கயுடைய-பல கதை பேசிய கண்களும் முகமும் தெளிவாகத் தெரிந்தது ஒளியமைப்பின் சிறப்பு. மூன்று பகுதியாக நிகழ்சிகள் நடைபெற்றது.
சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே --------- ----------- மிகுதி வரிகள் தேவையாயின் பெறலாம் . ஏன் இப்படியான மக்களின் வழ்க்கயைக் கூறும் பாடல்களிற்கு நடனம் அமைக்க முயற்சிக்கவில்லை . உங்களால் முடியும் கல்யாணி . கொஞ்சம் தேடுதல் வேண்டும். ஒப்பாரி வைத்தல் - புறநாநூற்றில் வருவது போன்று பொய்களைக்கூறி மக்களை உசுப்பேற்றல் -அல்லது கடவுளிடம் சென்று முறையிடுதல் . இவைதானா எங்களது மக்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்.இதற்கப்பால் மக்களது உண்மையான பிரச்சனைகளை கூறலாம். சற்று வெளியே வாருங்கள் . யாரும் முட்கம்பி வேலி போடவில்லை. உங்களில் நடனங்களிலோ , காட்சியமப்புக்களிலோ குறையொன்றும் கூறவில்லை. அவை கூறவேண்டிய கருத்துக்களிலே- இன்னும் சிறப்பகச் செய்யலாம். இன்னும் சற்று இடைவெளி விட்டு நீண்ட தேடலுடன் அடுத்த நிகழ்ச்சி மேலும் பாராட்டுப் பெற வேண்டி விடை பெறுகின்றேன். நன்றியுடன் இரசிகன் ந.பத்மநாதன்
பதில் கருத்து நர்த்தன காவியாவின் ஆண்டுவிழாவிற்கு நானும் வந்திருந்தேன். நான் இதைப்பற்றி முதலில் எழுதலாம் என்றிருந்தேன் ஆனால் திரு ஸ் ரீபன் அவர்களும் நான் நினைத்ததை எழுதியிருந்ததால் ஒதுங்கிக்கொண்டேன். ஆனால் இப்போது ந.பத்மநாதன் அவர்களின் கருத்து ஏதோ எழுதவேண்டும் என்பதற்காயும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காயும் எழுதப்பட்டது போல் இருப்பதால் இப்போது எழுதுகிறேன்.
அவர் குறிப்பிட்ட பாடல் வரிகள் எனக்கும் தெரியும் அதற்கு முதல் அப்பாடல் ஒரு நடனத்துக்கு தகுந்தமாதிரி பாடல் ஆக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே அது வெறுமே ஒரு நாடகத்தில் பாடப்பட்ட பாடல் மட்டுமே கல்யாணி ஒரு நடன ஆசிரியை இசையமைப்பாளர் இல்லை கிராமியப் பாடல்களை நடனத்துக்கு தயாரான பாடல் ஆக்க வேண்டும் எங்கேயோ கேட்க வேண்டிய கேள்வியை இங்கே வந்து கேட்பது உங்களை விமர்சகராகக் காட்டிக்கொள்ளவா? இந்த நிகழ்ச்சியில் நிறைய வித்தியாசங்களை செய்திருக்கிறார் அது உங்களுக்கு தெரியவில்லையா? ஒரு தேசத்தின் வலியைச் சொல்வது உங்களுக்கு ஒப்பாரியா? பாராட்டுவதுமாதிரி திட்டினால் மட்டும் நல்ல விமர்சகராகிவிட முடியாது என்பது எனது கருத்து. மற்றப்படி சிறந்த நிகழ்வுகளை தொடர்ந்து வழங்கிவரும் திருமதி கல்யாணி தயாபரன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் alex - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
பதில் கருத்து நான் எழுதிய விமர்சனத்தை Mr.அலெக்ஸ் என்பவர் தவறாகப் புரிந்து கொண்டார் . விமர்ச்னம் என்பது அவர்களை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்காகவே . வெறும் பாராட்டுக்கள் எங்கு கொண்டுபோய் விடும் என்பதை அனுபவமாக பலரும் உணர்ந்துள்ளோம் . கலையரசி கல்யாணி மிகவும் திறமைசாலி . அதில் யாருக்கும் மறுப்பு இல்லை . நான் இடைவேளையின் பொழுது ஒரு நண்பரிடம் கேட்டேன் - கல்யாணியா தனித்துவமாக இவ்வளவு நிகழ்ச்சிகளையும் பளக்கினார் என்று . அதை கனடாவில் இருந்து வந்த இயக்குனரே கூறிவிட்டார் . அதை நான் திரும்ம்பிக்கூறி என்ன பிரயோசனம் . நடனங்களில் புதுமையை புகுத்தியுள்ளார் என்று Mr.Steepan கூறிவிட்டர் அதை நான் திரும்பக்கூறி என்னபிரயோசனம்.
கல்யாணியின் திறமைக்கு அவரால் மேலும் பல புதுமைகள் செய்ய முடியும் என்பதாலும் -அவர் ஒரு ருக்மிணி தேவி அருன்டேல் போல் உருவாக விரும்ம்பியுமே இந்த விமர்சனத்தை எழுதினேன் . இதைக் கல்யாணி ஏற்றுக் கொள்ளாவிடின் , அவரது நிகழ்ச்சிகளை பற்றி இனிமேலும் எழுதுவதை நிறுத்திவிடுகிறென் . மகாககவி எழுதிய மீனவப்பாடலை "புதியதோர் வீடு " நாடக்த்தில் பயன்படுத்தி இருந்தார்கள் .அது நான் பார்த்தது 1978 ம் ஆண்டு என்று நம்புகிறேன் , பின்பு 86 ம் ஆண்டு கூத்துப்பட்டறையிலும் அதுபோல் பாடல்களை பாடினோம். கடந்த இருபது வருடங்களாக - இவற்ரை மறந்து இருந்தேன். கல்யாணி பாடிய அந்த மெட்டே , எனக்கு அந்தப்ப் பாடலை ஞாபகப்படுத்தியது.அது கூட கல்யாணியின் சிறப்பே.
|

