இன்றைய ஒளியோவியம்

Waterfall.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50353
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

அஸ்கர் பாரும் அன்னைபூபதி ஆண்டுநிறைவு

அஸ்கர் பாரும் அன்னை பூபதி ஆண்டு நிறைவு சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பமானது. குறித்த நேரத்தில் ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் தமது பங்களிப்பை வழங்கியதை நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் ஊடாகக் காணக்கூடியதாக இருந்து.

 

ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்காமல் பல தரப்பட்ட விடயங்களை இந்த மேடையில் காணக்கூடியதாக இருந்தது சிறப்பு.

சிறுவர் நடனங்களுடன் ஆரம்பித்த இன்நிகழ்வில். பிரகாஜினி நாகராஜாவினால் அமைக்கப்பட்ட மீனவர் நடனம் பலராலும் வரவேற்பினைப் பெற்றது. ஆண் பெண் இருதரப்பினரும் இந்த நடனத்தை நேர்த்தியாக ஆடிச்சென்றனர். பாடல் வரிகளைத் தந்தவர் திரு. குணசீலன் ப்ரான்ஸிஸ்

கீதா சுதாகரினால் நெறிப்படுத்தப்பட்டு நீதிமன்றக் நாடகம் மிகுந்த நகைச்சுவை உணர்வையும் கொண்டிருந்தது. மாணவர்களும் திறம்பட ரசித்து தமது பாத்திரங்களை சிறப்புறச் செய்தனர். இந்த நாடகத்தை எழுதியவர். திரு சிவபாதம் கணபதிப்பிள்ளை. இந்த நிகழ்வுக்கான மேடை அமைப்பும் சிறப்பாக இருந்தது.

தொடர்ந்து வந்த அண்ணன் தம்பிப் பாசமும், போரும் காதலும் என்று திரையிசைப் பாடல்களுடன் நெறிப்படுத்தப்பட்ட நடனமும் கதையும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நடன நாடகத்தை நெறிப்படுத்தியவர் திருமதி செல்வி மகேன் அவர்கள். வஞ்சகமும் சூழ்ச்சியும் இந்த நாடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டது மட்டுமில்லாமல் போரினால் இழப்புகள் மட்டுமே என்ற கருத்தையும் ரசிகர்களிடம் விட்டுச் சென்றனர்.

இந்த நிகழ்வில் இடம் பெற்ற தாளலய நிகழ்வினையும் குறிப்பிட்டு ஆக வேண்டும். மீக நீண்ட நேரத்தை பிடித்துக் கொண்ட இந்த நிகழ்வில் மாணவர்கள் அத்தனை வரிகளையும் மனனம் செய்து தாளத்திற்கேற்ப்ப பாடியது சிறப்பு. செல்வி அபிநயா மற்றும் சஜீவன் சங்கீதா அவர்களின் தமிழ் திறமையும் வெளிகொணரப்பட்டது. தாளலயம். ஒலிவாங்கிகள் சிலருக்கு சரிவரக் கவனிக்கப்படவி;ல்லை. மணவர்களும் கூத்தை ஒட்டிய இந்தத் தாளலயத்தில் மிகவும் ஒன்றியும் உற்சாகத்துடனும் நிகழ்த்திச் சென்றனர். நெறியாழ்கை திரு விஷ்னுசிங்கம் அவர்கள். இந்நிகழ்வில் மாணவர்களின் தமிழ் வளமும் ரசிகர்களை வியக்க வைத்தது. இப்படியான தமிழ் உச்சரிப்பை அறிவிப்பாளரில் காணமுடியாததை சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

தொடர்ந்து சங்கீத நிகழ்வும் அதைத் தொடர்ந்து மேல் வகுப்பு மாணவர்களின் கலந்துரையாடலும் நடந்தது. இவர்கள் எடுத்துக்கொண்ட விடயம் ”இரு கலாச்சாரச் சூழலில் வாழ்தல் நன்மையா? தீமையா?” இக்கலந்துரையாடலில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களும் தமது சொந்த கருத்துக்களை தமது சொந்தத் தமிலேயே பேசிச் சென்றது சிறப்பு. இந்தகைய வழிநடத்தல் என்பது எமது இளம் சமுதாயத்தினரிடம் கலந்துரையாடலுக்கான வளர்ச்சியையும் ஆளுமையையும் வளர்க்கிறது. இந்த வகையில் மாணவர்களை நெறிப்படுத்தியவர் ஆசிரியை திருமதி ஜெயசிறி விஷ்னுசிங்கம். 

இந்தப் பாடசாலையில் கிட்டத்தட்ட 70 மாணவர்கள் படிக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டது. அளவில் சிறியதாக இருக்கும் பாடசாலைகளில் மாணவர்கள் அனைவரும் சரிவரக் கவனிக்கப்படுகின்றனர் என்பது அறியக்கூடியதாக இருந்தது. சிறிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களால் தமது திறமையை முழுமையாகக் காட்ட வாய்ப்பும் கிடைக்கிறது. இருந்தாலும் நாலு மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் 6 மணித்தியாளங்கள் நீடித்தது சலிப்படையச் செய்யும் என்பதால் நேரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். ஒலி அமைப்பு மேலும் கவனிக்கப்பட்டிருக்கலாம்.

நிகழ்வு நிறைவு!

 

தற்போதய வாசகர்கள்

We have 8 guests online