இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50350முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
|
நாடுகடந்த தமிழீழக் கூட்டமும் சமுதாயப் பொறுப்புள்ளவர்களின் மௌனமும் -ந.பத்மநாதன்
கடந்த 24.01.2010 அன்று நாடுகடந்த தமிழீழ உருவாக்கம் பற்றிய விளக்க கூட்டம் ஒன்று Linserud பாடசாலையில் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே . திருவாளர் உருத்திரகுமாரன் அவர்கள் skype உதவியுடன் ,கேள்விகளுக்கு பதில் கூறு முன்பு , கொள்கை விளக்கம் நடந்தது.
பின்பு உருத்திர்குமாரனின் ஒரு நீண்ட உரையும் . கேள்வி பதிலும் நடைபெற்றது. அங்கு மக்களவை உறுப்பினரகள் சிலரும் ஆதரவாளர்களும் , வேறு பொதுமக்களும் கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு எல்லோருக்கும் உருத்திரகுமாரன் அவர்கள் போதிய விளக்கத்துடன் பதில் கொடுத்தார். நாடுகடந்த தமிழீழமும் , ஒரே நோக்கத்தைக் கொண்ட வேறு வேறு அமைப்புக்கள் என்றும் - அவை இரண்டும் இயங்கலாம் என்றும் கூறினார் . மற்றும் நாடு கடந்த தமிழீழம் , புலி முத்திரை குத்தப்பட்டவர்களை நேரடியாக ஈடுபட விடாது தனி ஜனநாயக அமைப்பாக இருக்கவேண்டும் என்றும் விரும்பினார் .(இது எனது விளக்கம் - வேறு யாராவது மேலும் விபரமாக் எழுதுங்கள் . விளக்கவுரை எனது நோக்கமும் அல்ல ). அங்கு மக்களவை ஆதரவாளர்கள் சிலர் குடித்துவிட்டும் குடியாமலும் ஜனநாயக விரோதப்ப் போக்குகளில் ஈடுபட்டதும் கவலைக்குரியதும், கண்டிக்கப்படக்கூடியதும். நான் கூட்டத்திற்கு சென்றது - ஜனநாயக வழியில், வெளியில் உள்ள புலி ஆதரவு அல்லாதோரையும் இணைக்கும்படி வலியுறுத்தவே சென்றேன் . ஆனால் அங்கு நிலமை அப்படி இருக்கவில்லை. ஒரு வயதில் முதிர்ந்த அனுபவசாலி ஒருவர் தலைவர் இறந்தது என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அவரின் எண்ணத்துக்கு உரிய ஜனநாயக உரிமையை மதியாது அவரை தாக்கச் சென்றார்கள். அவர்கள் தமது தவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன் Norway பத்திரிகை தலைவர் பிரபாகரனின் உடல் என்று ஒரு படத்தை பிரசுரித்து இருந்தார்கள் . பத்திரிகைக் காரியாலயம் முன் சென்று இவர்களால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா. இது ஒரு ஜனநாயக் நாடு . ஏனிவர்கள் ஆர்ர்ப்பாட்டம் செய்யவில்லை.?
என்னிலும் பார்க்க . வயது கூடியவ்ர்களும் , ஒஸ்லோவில் பலகாலம் வசித்தவர்களும் திருவாளர்கள் உமைபாலன் , விவேகானந்தன் போன்றொர் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். கல்யாணி தயாபரனின் அரங்கேற்ரத்தில் மக்கள் ஒற்றுமையை பற்றி கதைத்த இந்த விமர்சக்ர்கள் மௌனத்தைக் கலைத்து இங்கு நல்ல கருத்துக்கள் கூற வேண்டும் என்பதே எனது அவா. ஒற்றுமை வேண்டி |


